Sunday, 26 October 2014

மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

    
மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
     உங்கள் ராசிக்கு இதுநாள் வரை படாத பாடு படுத்தி வந்த , அஷ்டம சனி விலகுகிறது, உங்களுக்கு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு வந்த சனி உங்களுக்கு லாபத்தையும் கொடுத்து அதே நேரம் விரயத்தையும் கொடுப்பார் . சொத்து பிரச்னைகள் முடிவ்வுக்கு வரும். அலைசல்கள் குறையும் ,திருமண தடை நீங்கும் , கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும் ,கடன் பிரச்னைகள் நீங்கும் .மருத்துவ சிலவ்வுகள் குறையும்,ஆரோக்கியம் உண்டாகும் புத்திர தடை அகலும் ,அடுத்து அடுத்து வந்த தோல்விகள் நீங்கி வெற்றி கிட்டும் , குடும்பத்தில் தடை  பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும்.கஷ்டங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும் 
    
, பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

No comments:

Post a Comment