Sunday, 26 October 2014

ரிசிப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 ரிசிப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
     
     சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்

   உங்கள் ராசிக்கு இத்தனைநாள் ஆறில் இருந்து நன்மைகளை செய்து வந்த சனி இப்போது 7 ஆம் இடத்தில சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்கு இடையில் தீரா பகையும், பிரிவுகளும் கொடுக்கும். கணவன் மனைவி இடையில் கவனம் தேவை . வாகனத்தில் செல்லும் போது சிறு சிறு விபத்தை கொடுக்கும் கவனம் தேவை. சொத்து தகராறு வாகனத்தால் நஷ்டம் கால்நடைகள் மூலம் பிரச்னைகள் வரும் . இதன் பலன் அப்படியே நடக்காது சனி ரிசிப ராசிக்கு யோகாதிபடி ஆவதால் பாதிப்புகள் குறைத்து கொடுக்கும் . சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை . ஏமாறும் வாய்ப்பு உண்டு , கல்வி நண்பர்கள் விசியத்திலும்  கவனம் தேவை


பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 
    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு
வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது


No comments:

Post a Comment