Friday, 7 March 2014

மனதுக்கும் புத்திக்கும் என்ன வித்தியாசம் ?




மனதிற்கும் புத்திக்கும் என்ன வித்தியாசம் ?

பலருக்கு மனது என்றால் என்ன [புத்தி என்றால் என்ன என்பது தெரியவில்லை .மனது என்பது எப்பொழுதும் உணர்சிகள் சம்பந்தப்பட்டது அது ஒவ்வொரு விசயத்திலும் பிடிக்கும் பிடிக்காது என்பதை நமக்கு உணர்த்தும் . புத்தி என்பது நல்லது கெட்டது எது என்பதை நமக்கு உணர்த்தும்.
         உதாரணமாக ,ஒரு கார் வாங்குவதற்காக நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது ,அங்கே 50 விதமான கார்களை வரிசையாக நிறுத்தி இருக்கிறார்கள் . நீங்கள் தூரமாக இருந்து 50காரையும் உங்கள் கண்களால் பார்த்து கொண்டு இருக்கும் போது , உங்கள் மனம் அந்த 50காரில் ஒன்று அல்லது இரண்டு கார்களில் மட்டுமே கவனம் செலுத்தும் . நமது மனம் அந்த 50 காரில் எந்த கார் பிடித்து இருகிறது எந்த கார் பிடிக்கவில்லை என்பதை என உடனடியாக நமக்கு தெரியபடுத்தும் இந்த மனதுக்கு அந்த காரில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் நம்மால் வாங்க முடியுமா இதன் விலை என்ன பெட்ரோல் மூலமாக ஓடுகிறதா டீசல் மூலமாக ஓடுகிறதா என்பதை எல்லாம் பற்றி கவலைபடாது மனது எனக்கு பிடித்து இருக்கிறது பிடிக்க வில்லை என்பது மட்டுமே நமக்கு தெளிவாக உணர்த்தும்ஆனால் புத்தி என்பது அந்த கார் அலுவலகத்துக்கு சென்று ஒவ்வொரு காரை பற்றிய விசயங்களை பற்றி தெரிந்து கொண்டு எந்தந்த காரின் விலை என்ன எதற்கு லோன் கிடைக்கும் எதற்கு கிடைக்காது அது நாம் வீட்டில் உள்ள அணைத்து நபர்களுக்கும் பொருந்துமா அலுவலகத்துக்கு பொருந்துமா நமது வீட்டில் நிறுத்த முடிமாபோன்ற பல சந்தேகங்களை போன் கேட்டு கொண்டுஇரண்டு மூன்று நாள் அல்லது ஒரு வாரம் கழித்து நமது புத்திஒரு முடிவுக்குவரும்அந்த அம்பது காரில் இந்த கார் தான் இருபதிலேயே நல்லது இதை நாம் வாங்கலாம்என்று கூரும் இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் மனதிற்கு பிடித்த காருக்கும் புத்தி நல்லது என்ற காருக்கும்சம்பந்தமே இருக்காது இதே போல் ஒவ்வொரு விசியதிலும்நாம் மனது ஒரு முடிவையும்புத்தி ஒரு முடிவையும் எடுக்கிறது.
          உலகில் உள்ள அணைத்து மனிதருக்கும் உள்ள குழப்பத்திற்கு காரணம் மனதிற்கு பிடித்தது செய்வதா அல்லது நல்லதை செய்வதாஇத குழப்பம் தான் மனிதனனின் அமைதிக்கு பெரிய எதிரி .இதை புரிந்து கொண்டால் நாம் மனதில் அமைதி என்றும் இருக்கும்.புத்தியும் மனதும் தனி தனியாக வேலை செய்யும் போது குழப்பம் ஏற்படுகிறது.
  மனதுக்கு  பிடிக்கும் பிடிக்காது என்று மட்டுமே சொல்லதெறியும் .ஆனால் புத்திக்கு மட்டுமே நல்லது கெட்டது தெரியும் .ஒரு பொருளை வாங்கும் போதோ அல்லது ஒரு செயலை செயும் போதோ நாம் மனதுக்கும் புத்திக்கும் இரண்டுக்கும் பிடிக்கும் ஒரு காரியம் செய்யும் போது அது எப்போதும் நமக்கு பிரச்னை தராது . புத்திக்கு மட்டும் பிடித்து ஒரு காரியம் செய்தாலும் அல்லது மனதுக்கு மட்டும் பிடித்து ஒரு காரியம் செய்தாலும் அந்த செயல் என்றாவது ஒரு நாள் பிரச்னை கொடுக்கும் எந்த ஒரு செயலையும் செய்தாலும் மனதுக்கும் புத்திக்கும் பிடித்த ஒரு செயலை செய்தால் தான் அந்த செயல் தான் வெற்றி பெறும் .
நன்றி ; healer பாஸ்கர் 

என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்


No comments:

Post a Comment