Sunday, 16 March 2014

18 ம் படி ரகசியம்


18 ம் படி ரகசியம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டு படிகள் இருப்பதுக்கு என்ன காரணம் என்று பாப்போம்.
நாம் சபரிமலைக்கு மாலை இட்டால் சில சம்பிரதாயங்களை கடைபிடிப்போம் .அந்த சம்பிரதாயங்களை கடை பிடித்தால் தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்று எலோருக்கும் தெரியும் .அந்த சம்பிரதாயங்களை ஒற்றியே இந்த பதினெட்டாம் படி ரகசியம் ஒளிந்து உள்ளது.
சம்பிரதாயங்களில் ஒன்று பஞ்சேந்திரியங்களை அடக்குவது .அதாவது கண், காது, மூக்கு ,வாய், தோல், இதை அடக்குவது . காதுக்கு கெட்டதை கேக்காதே, கண்ணுக்கு கெட்ட விசயங்களை பாக்காதே,வாய்க்கு புலால் உண்ணாதே ,தோலுக்கு இரண்டு வேளையும் குளித்து சுத்தபடுத்து ,இப்படி பஞ்சேந்திரியங்களையும் அடக்கி , அறுங்குணங்ககளையும் சீரமைத்து   அறுங்குணம் என்றால் ஆறு குணம் .நம்மிடம் உள்ள கெட்ட ஆறு குணங்களான பேராசை ,கடும்பற்று ,சினம் ,முறைஅற்ற பால் கவர்ச்சி(SEX), உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் இந்த ஆறு குணங்களையும் சீரமைத்தல் நாம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களின் வழியாக ஏழு சக்கரம் என்றால் மூலாதாரம், சுவாதிஸ்தானம்,மணிபூரகம், அனகாதம்,விசுத்தி, ஆக்கினை, துரியம் என்னும் ஏழு சக்கரங்களை கடந்து குண்டலினி சக்தி மேலோங்கி  நிற்கும் அப்பொழுது  ஐந்து பூதங்களின் அப்பனான அய்யப்பனை கண்டு தரிசிக்கலாம் என்பதே ஐதீகம், பஞ்சேந்திரியங்களை அடக்கி ,அறுங்குணங்களை சீரமைத்து , ஏழு சக்கரங்களை கடந்து இந்த பதினெட்டு விதிகளை கடைபிடித்தால் ஐந்து பூதங்களின் அப்பனான ஐயப்பனை காணலாம் என்பதே ஐதீகம்.
என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்

No comments:

Post a Comment