Thursday, 10 April 2014

எது பாவம்


எது பாவம்




நாம் செய்கின்ற செயல்களில் எது பாவம் எது புண்ணியம் என்று தெரிவதில்லை ,நாம் பாவம் செய்கிறோமா அல்லது  புண்ணியம் செய்கிறோமா என்று எப்படி அறிந்து கொள்ளலாம் என்று பாப்போம்

         பாவம் என்பது நம்முடைய, எண்ணம் ,சொல் ,செயலால், மற்றவர்களுக்கு , தற்காலத்திலோ, அல்லது பிற்காலத்திலோ, அவர்களின் உடலுக்கோ ,மனத்திற்கோ , பொருளுக்கோ ,துன்பம் விளைவித்தால் அது பாவம் .
   புண்ணியம் என்பது நம்முடைய, எண்ணம் ,சொல் ,செயலால், மற்றவர்களுக்கு , தற்காலத்திலோ, அல்லது பிற்காலத்திலோ, அவர்களின் உடலுக்கோ ,மனத்திற்கோ , பொருளுக்கோ ,இன்பம்  விளைவித்தால் அது புண்ணியம்.
     பாவம் செய்கிறவர்களும் நன்றாக வாழ்கிறார்கள் ,கஷ்டபடாமல் இருக்கிறார்கள் அவ்வாறு இருக்க என்ன காரணம் என்று கேக்கலாம்,
நான் ஒரு கடைக்கு பொருள் வாங்க ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு செல்கிரேன், ஆயிரம் ரூபாய் தீரும் வரை நான் எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் வாங்கலாம் .ஆயிரம் ரூபாய் முடிந்த  பிறக்கு நான் வாங்கும் ஒவ்வொரு பொருளும் எனக்கு கடனே, அதை நான் திருப்பி செலுத்தியாகவேண்டும். அதே போல் ஒரு மனிதன் முன்பிறவியில் செய்த புண்ணியம் இருக்கும் வரை பாவம் செய்தால் பாதிக்காது ,அதன் பிறக்கு செய்யும் ஒவ்வொரு பாவதிறக்கும் கஷ்டம் அனுபவித்தே ஆக வேண்டும் .
    லஞ்சம் வாங்கும் சிலர் மட்டும் தண்டனை அனுபவிப்பதற்கும் சிலர் தண்டனை அனுபவிக்காமல் இருப்பதற்கும் இது தான் காரணம் அவர்களின் புண்ணியம் எப்போது முடிகிறதோ அப்போது அவர்களுக்கு கஷ்டம் தொடங்கும் ,மேலும் எல்லா லஞ்சமும் பாவம் ஆகாது உதாரணமாக ஒருவருடைய கல்வி சான்றிதழ் தொலைந்து விடுகிறது .அந்த கல்வி சான்றிதழை வைத்து அவர் வெளி நாடு செல்ல வேண்டும் .அவருக்கு அவசரமாக சான்றிதழ் தேவைபடுகிறது ,அப்போது ஒரு அதிகாரி லஞ்சம் வங்கி கொண்டு சான்றிதழ் கொடுத்தால் அது பாவம் இல்லை, காரணம் அந்த செயலால் பணம் கொடுப்பவருக்கோ அல்லது பணம் வாங்குபவருக்கோ அல்லது மற்றவருக்கோ அந்த செயலால் எந்த துன்பமும் இல்லை.அதனால் இது பாவம் இல்லை.
  ஆனால் ஒரு அரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வருகிறார் .அவருக்கு பணம் பெற்று கொண்டு சிகிச்சை அளித்தால் அது பாவம் .அந்த நோயாளி மனம் வருந்தினால் அது பாவம்.
 என்றும் அன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்



No comments:

Post a Comment