Thursday, 6 March 2014

இராமர் பட்டாபிஷேகம் காட்சி உணர்த்துவது


இராமர் பட்டாபிஷேகம் காட்சி உணர்த்துவது என்ன

இந்திய கடவுள்களில் அதிகம் பேசப்படும் கடவுளான ராமருக்கு தனியாக எங்காவது கோவில் உள்ளதா ராமர் லட்சுமணன் சீதை உடன் தான் கோவில் உள்ளது .
      ராமாயண காவியத்தில் ராவணனை வென்றது இராமரின் வீரம் மட்டும் அல்ல ,,இராமன் லட்சுமணன் சீதை அனுமான் இவர்களின் ஒத்துழைப்பால் தான் ராமாயணம் வென்றது ,.இராமன் வனவாசம் செல்லும்போது லக்ஷ்மணன் அரச சுகத்துக்கும் பதவி சுகத்துக்கும் ஆசை பட்டு இராமனுடன் செல்லாமல் இருந்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது. சீதை அசோகா வனத்தில் இருக்கும் போது இராமன் இத்தனை நாள் வராதவர் இனிமேல் தான் வர போகிறாரா என நினைத்து ராவணனின் அரண்மனையில் தஞ்சம் அடைந்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது . அனுமான் அவர்கள்,சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தும் ,லட்சுமணன் உயிரை சஞ்ஜுவி முலிகையால் மீட்காமல் இருந்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது . பரதன் பதவி சுகத்துக்கு ஆசைபடாமல் அண்ணன் வரும் வரை அவர் பாதணிகளை வைத்து ஆட்சி செய்து இராமர் வந்தஉடன் பட்டாபிசேகம் செய்து வைக்காமல் ஆட்சியை தன வசம் வைத்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது . அதனால் தான் ராமர் பட்டாபிசேகம் காட்சி புகழ் பெற்றது . அதனால் தான் ராமருக்கு தனியாக எங்கும் கோவில் இல்லை 

 என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்


No comments:

Post a Comment