Sunday, 26 October 2014

மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

        
மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

     சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.



       இதுவரை 7 ஆம் இடத்தில இருந்த சனி இப்போது 8 ஆம் இடத்துக்கு அஷ்டமாதிபதியாக சனிமாறுகிறார் . அட்டமத்து சனி தொட்டது துலங்காது என்பார்கள் .


        8 இல் ஆயுள் ஸ்தானதில் சனி வருவதால் ஆயுள் தீர்க்கம் . ஆனால் சிறு விபத்துகள் , மன சஞ்சலங்கள் , வைத்திய சிலவு , மன கவலைகள் , ஆகியவை உண்டாகும் . வாழ்க்கையிலும் தொழிலும் பிரச்னைகள் உண்டாகும் கவனம் தேவை 

      

பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு


   வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது 

No comments:

Post a Comment