Sunday, 26 October 2014

மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 
  மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
        உங்களுக்கு சனி 11 ஆம் இதுக்கு லாப ஸ்தானத்தில் வருவதால் மருத்துவ சிலவுகள் நீங்கும் வருமானம் பெருகும் ,செல்வாக்கு உயரும் ,வீடு கட்டும் யோகம் , வண்டி வாகன யோகம் கிட்டும் . உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கொடுக்கும் செல்வாக்கு புகழ் உண்டாகும் ,நீண்ட நாள் தடை பட்ட விசியங்கள் கைகூடும் ,திருமண யோகம் உண்டாகும். மூத்த சகோதர்களால் ஆதாயம் கிடைக்கும்

பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

No comments:

Post a Comment