Sunday, 26 October 2014

சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 
  சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
            உங்கள் ராசிக்கு இது வரை 3 ஆம் இடத்தில்  தைரியம் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனி தைரியம் துணிச்சல் வீரியத்தை கொடுத்து வந்த சனி 4 ஆம் இடத்துக்கு அர்த்த அஷ்டம சனியாக பெயர்வதால் இனி பிரச்னைகள் கொடுக்கும் .
     உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் , மனஉளைசல் கொடுக்கும் ,வருமான தடை, வண்டி வாகனத்தில் விரயம் ,சிறு விபத்துகள், தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ,அரசாங்க வழியில் பிரச்னை , மற்றும் குடும்பத்தில் நண்பர்களிடம் வீண் வம்பு வழக்கு உருவாகும் ,பொருளாதார பற்றாகுறை திருமண தடை ,மனதில் பயம் ,எதிரிகலால் தொல்லை ஆகியவை உண்டாகும்
 பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது

No comments:

Post a Comment