மனிதன் சைவ
பிராணியா ? அசைவ பிராணியா ?
மனிதனுடைய உடல் அமைப்பு சைவத்துக்காக படைக்கப்பட்ட உயரினமா ? அல்லது அசைவம் சாபிடுவதுக்காக படைக்கப்பட்ட உடலமைப்பா என்பதை பற்றி
பார்போம்
இது மதம் ரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியான
பதிவு அல்ல அறிவியல் ரீதியான பதிவு இது
முதலில் கடவுள் அல்லது இறைநிலை முதன் முதலில்
ஒரு அறிவு தாவரத்தை படைத்தார் ஆனால் அந்த ஒரு அறிவு தாவரம் எங்கும் நகர
முடியாமலும் சூரிய ஒளியையும் கார்பன்டை ஆக்சைடும் உணவாக கொண்டு வளர்ந்தது .இது நகர
கூடியதாக இருந்தால், தான் உணவை தானே தேடி கொள்ளும் என்று உணர்த்த கடவுள் தான்
அடுத்த படைப்பை அந்த தவறை சரி செய்து இரண்டு அறிவுள்ள உயரினமான நத்தை போன்ற
உயரினத்தை படைத்தார் ,நகர கூடியதாகவும் நுகரும் தன்மை உடையதாகவும் படைத்தார் .
அடுத்த தன்னுடைய படைப்பான உயரினத்தை படைக்கும்
போது இரண்டு அறிவு உயரினத்தின் குறையை நிவர்த்தி செய்து ,நகர கூடியதாகவும் நுகரும் தன்மை
உடையதாகவும் உணவை உண்ண வாய் உடையதாகவும்
மூன்றுஅறிவு உள்ள எறும்பு கரையான் போன்ற உயரினத்தை படைத்தார்
அதே போல் நான்கறிவு உயரினமான நண்டு தும்பி
வண்டு போன்ற உயரினத்தையும் அடுத்து ஐந்து அறிவுள்ள விலங்குகள் பறவைகளையும் படைத்தார்
தன்னுடைய அடுத்த படைப்பை படைக்கும் போது ஐந்து
அறிவு உயரினத்தில் என்னன்னா குறை உள்ளது என்பதை ஆராய்ந்து அதை எல்லாம் நிவர்த்தி
செய்து ஆறுஅறிவு உள்ள மனிதனை படைத்தார்
ஐந்து அறிவு படைப்பில் உள்ள ஒரு குறை தான் , விலங்குகளின்
உணவு முறை, தான் உணவை தானே சுயமாக தயாரிக்க தெரியாததால், அது பிற உயரினங்களை
சார்ந்து வாழ்ந்தது. . உணவுக்காக ஒரு அசைவம் உண்ணும் விலங்கு, மற்றொரு விலங்கை
அழிக்கும்போது, அங்கே சில பாதக செயல்கள் நடந்தது. .அதாவது உயர்பலி, வன்முறை,
பிறர்பொருள் ,அபகரித்தல் இன்னும் பல பாதகங்கள் அரங்கேறின அதை நிவர்த்தி செய்ய
கடவுள் , தான் உணவை தானே சுயமாக தயார் செய்யும் பொருட்டு ஆறாம் அறிவான பகுத்து
ஆராயும் அறிவை படைத்தார்
இதை நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கும், மனிதஉடலமைப்பை சைவம் உண்ணும் உடல் அமைப்போடு தான் கடவுள் படைத்துள்ளார். இதற்கு சில
அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் காணலாம் .
அசைவம் உண்ணும் உயரினங்கள் எல்லாம் தண்ணீரை
நக்கி நக்கி தான் குடிக்கும் உதாரணமாக நாய் ,பூனை, சிங்கம், புலி போன்ற பிராணிகளை பார்த்தல்
தெரியும் .ஆனால் சைவம் உண்ணும் உயரினமான மாடு ஆடு மான் போன்ற உயரினங்கள் தண்ணிரை
உறிஞ்சு குடிக்கும் .மனிதனும் உறிஞ்சு குடிக்கும் தன்மையுடன் தான் கடவுள்
படைத்துள்ளார்
மேலும் அசைவம் உண்ணும் விலங்குகளுக்கு உணவு
உண்ணும் போது சதையை கிழிக்கும் பொருட்டு கோரைபல் என்கின்ற நிளமான பல்லை
படைத்துள்ளார் .இது சைவம் உண்ணும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் கிடையாது .மேலும்
பல உள்ளன, நக அமைப்பும் அதே போல் மாறுபடும்.
மனிதன் சைவ பிராணி என்பதை இதன் மூலம் அறியலாம்
.
இந்த பதிவு பிடித்து இருந்தால் மற்றவருக்கு
பகிருங்கள்
.
என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன்
கோயம்புத்தூர்
நல்ல ஆரோக்கியமான சிந்தனை ! பதிவுக்கு மிக்க நன்றி . ஆறாவது அறிவின் வெளிப்பாடு ! சந்தேகமே இல்லை..
ReplyDeleteஉங்களால் மனிதனுக்கு கோரைப்பள் நீளமான பல் கிடையாது என்று நிருப்பிக்க முடியுமா இதை பொது மேடையில் விவாதம் செய்ய தயாரா சொல்லுங்கள் எங்கு எப்பொழுது இதற்க்கான முழு பொறுப்பையும் செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்
ReplyDelete