Monday, 10 February 2014

கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்தில் தரித்திரம் பிடிக்குமா ?முன்னோர்கள் சொல்வது உண்மையா?


கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்தில் தரித்திரம் பிடிக்குமா ?முன்னோர்கள் சொல்வது உண்மையா?

நம் முன்னோர்கள் சொல் வாக்கில் பல விசயங்களை சொல்லி விட்டு சென்றுள்ளனர் .அதன் அர்த்தம் தெரியாமல் நாம் பலவற்றை மறந்து உள்ளோம் .மேலும் அதன் அர்த்தம் தெரியாததல் சிலவற்றை கடைபிடிப்பதும் இல்லை. அவர்கள் சொல்லிவிட்டு சென்றதில் ஒன்று தான் இந்த  கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்தில் தரித்திரம் பிடிக்கும் என்பது அதை பற்றி இந்த பதிவில் பார்போம் .

நாம் காலையில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும் போது நல்ல சுறுசுறுப்பாக செல்லுவோம் ,மாலை வீடு திரும்பும்போது சோம்பலாக களைப்போடு வருவோம் காலையில் இருந்த சுறுசுறுப்பு எங்கே போய்விட்டது.நாம் வேலை செய்யும் போது நம் உடல் சக்தி செலவாகிறது அதனால் நாம் சக்தி இழந்து மாலை வரும்போது களைப்படைகிறோம் இந்த சக்தியை தான் பிராண சக்தி என்பார்கள் .

நாம் எந்த வேலை செய்தாலும் நாம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும். நடப்பது ஓடுவது பார்பது பேசுவது இது போல் எந்த வேலை செய்தாலும் நாம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும் .

இப்போது விசயத்துக்கு வருவோம் நாம் தேவையை பூர்த்தி செய்வதற்கு அவசியமான வேலைகள் செய்து செலவாகும் பிராண சக்தியை விட எந்த தேவையும் இல்லாமல் எந்நேரமும் கால் ஆட்டி கொண்டே இருப்பதால் நாம் உடலில் சேமித்து வைத்து உள்ள சக்தி அனைத்தும் செலவாகிவிடும்.அதனால் நாம் அன்றாட வேலைகள் செய்யும் போது நாம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது அதனால் நாம் விரைவில் களைப்படைவோம், இது தொடரும் போது சில காலம் கழித்து.நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் விரைவில் நோய்வாய்படுவோம்.

நீங்கள் நினைக்கலாம் .அதற்காக கையும் காலும் ஆட்டாமலே இருக்க முடியுமா என்று.கையும் காலும் ஆட்டுவது தவறல்ல எந்நேரமும் தேவை இல்லாமல் ஆட்டுவது தான் தவறு உதாரணமாக நம் வீட்டில்  மின்சாரம் உள்ளது பல்ப் உள்ளது .இரவு நேரம் நாம் தேவைக்காக பல்ப் எரிந்து கொண்டு இருந்தால் தவறில்லை ஆனால் நம்மிடம் மின்சாரம் உள்ளது பல்ப் உள்ளது என்று தேவை இல்லாமல் பகல் முழுவதும் எரிந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும் .மின் சக்தியும் பல்பின் ஆயுள்காலமும் தான் விரயமாகும் அதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை , . .

இது போல் தேவை இல்லாமல் தொடர்ந்து செய்து நோய்வாய்பட்டால். வேலைக்கும் செல்ல முடியாது மருத்துவ செலவும் அதிகமா ஏற்படும். எவ்வளவு வசதி இருந்தாலும் வேலையில் வருமானம் இல்லாமலும் மருத்துவ செலவு மட்டுமே இருந்தால்.விரைவில் எல்லாம் இழந்து தரிதிரம்  ஏற்படும் .இந்த விளக்கத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லி விளக்கம் கொடுக்க முடியாது என்பதால் அதை சுருக்கி கால் ஆட்டி கொண்டு இருந்தால் தரித்திரம் பிடிக்கும் , அல்லது கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்தையே ஆட்டி வைக்கும் என்று சொல்லி விட்டு சென்றுள்ளனர்

இந்த பதிவு பிடித்து இருந்தால் மற்றவருக்கும் பகிரவும்

என்றும் ஆன்மீக வழியல் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்


No comments:

Post a Comment