வடக்கே
தலை வைத்து தூங்கலாமா? அறிவியல் பூர்வமான விளக்கங்கள்
வடக்கே தலை
வைத்து படுத்தால் என்ன ஆகும் நன்மையா தீமையா என்று பார்போம்.
பொதுவாக பல பேர்
வீட்டில் வடக்கே தலை வைத்து படுக்க வேண்டாம், என்று சொல்லி
இருப்பார்கள். வாழ்ந்தாலும் வடக்கு தலைவைக்காதே, கெட்டாலும்,
கிழக்கே தலைவைக்காதே, என்று சொல்லுவார்கள். வடக்கே தலைவைத்தால்
வாடகாத்து, தெக்கே தலைவைத்தால் தென்றல் காத்து, அதே போல்
கேரளாவில் பாட்டிமார்கள் புது மாப்பிளை வடக்கே, தலை வைத்து படுக்க வேண்டாம்
என்றும் சொல்லுவார்கள், ஆனால் அவர்களுக்கு
காரணம் தெரியாது நாம் கேட்டாலும் அவர்களுக்கு சொல்லவும் தெரியாது, நாமும் பெரியவர்கள் சொல்லி விட்டு
சென்றுள்ளர்கள் என்று கடைபிடிப்போம்.ஆனால் காலம் காலமாக அதை கடைபிடிபவர்களுக்கு
அதனால் என்ன நன்மை என்றும் தெரியாது அதை பற்றி பார்போம்
நாம் வீட்டில் தொலைகாட்சி பெட்டி
திரைக்கு அருகில் செல்லும் போது நாம்
உடலில் உள்ள ரோமங்கள் இழுக்கும்.அதற்க்கு காரணம் அங்கே தொலைக்காட்சியில் மின்
கந்தம் இருகிறது . நம்மிடம் ஜீவகாந்தம் இருகிறது.அதனால் ஒன்றை ஒன்று இழுக்கிறது.இதன்
முலம் என்ன தெரிகிறது என்றால் நாம் உடலில் காந்த ஆற்றல் என்று ஒன்று உள்ளது என்பதை
அறியலாம்
காந்த ஆற்றல் மனிதர்களுக்கு இடுப்புக்கு
மேல் பகுதி வடதுருவமாகவும், இடுப்புக்கு கீழ் பகுதி தென்துருவமாகவும் செயல்பட்டுவருகிறது
.நாம் ஜெனனம் ஆவதும் கூட காந்தவிலகல் தத்துவத்தால் தான் . அதாவது ஒரு தாய் வயற்றில்
குழந்தை உருவாகும் போது தாயின் இடுப்புக்கு மேல் பகுதி வடக்காகவும் கீழ் பகுதி தெற்காகவும் செயல்படும்.ஆனால்
குழந்தைக்கு இடுப்புக்குமேல் பகுதி தெற்காகவும் , கீழ் பகுதி வடக்காகவும்,
மாறி இருக்கும் குழந்தையின் ஜெனன காலம் வரை அப்படியே இருக்கும் , குழந்தைக்கு
எப்பொழுது இடுப்புக்கு மேல் பகுதி வடக்காக மாறுகிறததோ, அப்போது தாயின் வடக்கு
பகுதியும் குழந்தையின் வடக்கு பகுதியும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் அப்போது
குழந்தையின் தலை திரும்பி கீழ் நோக்கி
தள்ளும் அப்போது தான் குழந்தை வெளிய ஜெனனம் ஆகும் .இதுஎல்லாம் நாம் உடலில் உள்ள காந்த
சக்தியால் தான் நிகழ்கிறது.
நாம் தலை பகுதி வடதுருவமாக செயல்படுவதால் நாம்
வடக்கே தலை வைத்துபடுப்பதால் பூமியின் வடதுருவமும் நாம் உடலில் உள்ள வடதுருவமும்
ஒன்றை ஒன்று எதிர்க்கும் .அதனால் ரத்தஓட்டம் தலை பகுதிக்கு அதிகமாக இழுக்கும்
.அதனால் நமக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது மேலும் மூளை பகுதி பாதித்து மன குழப்பங்கள்
அதிகமாகும் .
தெற்கே தலை வைத்து குறைந்த நேரம் தூங்கினால் கூட நல்ல நிம்மதியான
தூக்கம் வரும் .
புது
மாப்பிளைகள் குறைந்த நேரமே தூங்குவார்கள். குறைந்த நேரம் தூங்கினால் கூட நன்றாக
துங்க வேண்டும் என்றுதான் புது மாப்பிளை வடக்கே தலை வைக்ககூடாது என்று
சொல்லுவார்கள் தெற்கே தலை வைத்து துங்குவது தான் சிறப்பு.
இந்த பதிவு பிடித்து இருந்தால் மற்றவருக்கும் பகிரவும்
என்றும் அன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்


அருமையான தகவல்கள்
ReplyDeleteஅருமையான தகவல்கள்
ReplyDelete