Tuesday, 30 December 2014

மனதைத் தொட்ட வரிகள்....!!

மனதைத் தொட்ட வரிகள்....!!
1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? 
உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.
5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது
7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!
8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
10. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
11. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
12. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
13. வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
14. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
15. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
16. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
17. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
18. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
19. பறக்க விரும்புபவனால் படர முடியாது.
20. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை
அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
21. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!
நமது வீட்டின் வாயிலை அழகுபடுத்துவதில் கோலம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோன்று நமது உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்துவதுதான் அதிகாலை நீராடுதல்
தூங்கும்போது இந்திரியங்களில் ஏற்படும் அசுத்தி மற்றும் உடல் அசதி நீங்கி புத்துணர்வு பெற அதிகாலையில் நீராடுதல் நல்லது.
நீராடலில் மூன்று வகை உள்ளது. அவை
1 ரிஷி ஸ்நானம் [காலை 4 முதல் 5 வரை] உத்தமம்,
2 மனித ஸ்நானம் [காலை 5 முதல் 6.30 வரை] மத்திமம்.
3 ராட்சக்ஷ ஸ்நானம் [காலை 6.30க்கு மேல்] அதமம். சூரிய உதயத்துக்கு முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும். அந்த நேரத்தில் நீராடுவது பிராத ஸ்நானம் எனப்படும்.
அதிகாலையில் நீராடுபவர்களுக்கு சரீர அழகு பலம் சுத்தம் ஆயுள் ஆரோக்கியம் தைரியம் கிடைக்கும். சாஸ்திர விதிப்படி மூன்று வருட காலம் அதிகாலை நீராடுபவருக்கு ஏழு பிறவிகளில் செய்த பாபங்களும் நீங்கும் என்கிறது பராசரஸ்மிருதி.
நீராடுவது என்றால் உடனே தண்ணீரில் குதிப்பது என்று பொருளல்ல. எங்கே எப்படி குளிக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன. ஆற்றில் நீராடும்போது நீரோட்ட திசையில் நின்று நீராட வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளித்தால் முதலில் தலையில் நீரை ஊற்றவேண்டும். வென்னீர் ஊற்றி தலை குளிக்கும்போது உள்ளங்காலில் ஆரம்பித்து பின் படிப்படியாக உச்சந்தலையில் ஊற்றவேண்டும் என்பது பெரியோர் அறிவுரை எனவே நீராடும்போது இறைப்பாடல்களைப் பாடிக்கொண்டோ அல்லது இறைகோஷங்களை ஓதிக்கொண்டோ குளிப்பது நலம்.
அறிவியல் விளக்கங்கள்:—–
அதிகாலை சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி எலும்புகளின் பலத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பார்த்து நின்று குளிக்கவேண்டும் நம் உடலில் வெப்ப நிலையைவிட வென்னீரின் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் வென்னீரை முதலில் தலையில் ஊற்றும்போது நரம்புத்தளர்ச்சி ஏற்படும் எனவேதான் பாதத்தில் இருந்து படிப்படியாக ஊற்றினால் உடலின் வெப்ப நிலை பாதிப்படையாது. இறைவன் பெயரை சொல்லிக்கொண்டே குளிப்பதால் சைனஸ் பிரச்னை வராது நம் முகத்தில் குறிப்பாக தாடையில் உள்ள வேகஸ் நரம்புகள் கோஷம் கூறும்போது இயங்குவதால் நீர்கோர்வை தடுக்கப்படுகிறது, விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மந்திர ஒலிகளின் அதிர்வுகள் நம் உடலில் நுழையத் தடை ஏற்படுகிறது. அதனால்தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பதை மரபாக வைத்துள்ளனர் நம் பெரியோர்.
தவிர விரத நாட்களில் பகலில் தூங்கக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்தால் பகலில் தூக்கம் வரும். எனவே வெறும் தலைக்கு குளிக்கலாம் என்றும் கூறினர்.

Tuesday, 23 December 2014

பொன்மொழிகள்...!!

பொன்மொழிகள்...!!
1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
6. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம் தான் வேண்டும்.
7. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
8. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
9. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
10. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.
11.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது..

Monday, 8 December 2014

பொன்மொழிகள்..

பொன்மொழிகள்...
1. பேசா விரதமே பெருவிரதம். - பழமொழி
2. யாகாவாராயினும் நாகாக்க. - திருக்குறள்
3. உடலும் உள்ளமும் கெடுவதற்குக் காரணம் வாய்தான் - போர்னியா
4. சில சமயங்களில் வாய்திறந்து பேசுவதைவிட பேசாமல் இருப்பதே மிகுந்த பலனைத் தரும்.- மகாத்மா காந்தி
5. கால் வழுக்கினால் உடல் ஊனமடையும். நாக்கு வழுக்கினால் வாழ்க்கையே பாழாகிவிடும்.
- ஹென்றிபோர்ட்
6. நீ பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான். - பைபிள்
7. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை, அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
- நபிகள் நாயகம்
8. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக் கொள்வான். - தாமஸ் புல்லர்
9. அறிவாளி யோசித்துவிட்டுப் பேசுகிறான்; முட்டாள் பேசிவிட்டு யோசிக்கிறான். - டனலல்
10. எல்லோருக்கும் காது கொடுங்கள்; எவரிடமும் வாய் கொடுக்காதீர்கள். - ஷேக்ஸ்பியர்

Tuesday, 4 November 2014

செய்வினை நீங்க

ஏவல் பில்லி சூன்யம் செய்வதில் பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.

1. காலடி மண் :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

2.சுடுகாட்டு சாம்பல் :ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

3.முட்டை :ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.

4.எந்திர தகடு :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.

5.சுண்ணாம்பு :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.

6.எலுமிச்சை :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.

7. மந்திர பாவை (பொம்மை) :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.

      செய்வினை, ஏவல், பில்லி, சூனியம்,அழிந்தோட

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்திபண்டாசூரனைவதம்செய்தாள்
    ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.
இதோ அதன் செய்முறை…!
1.
வெண்கடுகு250 கிராம்
2.
நாய்க்கடுகு250 கிராம்
3.
மருதாணி விதை250 கிராம்
4.
சாம்பிராணி250கிராம்
5.
அருகம்புல் பொடி50 கிராம்
6.
வில்வ இலை பொடி50 கிராம்
7.
வேப்ப இலை பொடி50 கிராம்
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Sunday, 26 October 2014

மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
     உங்கள் ராசிக்கு இதுநாள் வரை படாத பாடு படுத்தி வந்த , அஷ்டம சனி விலகுகிறது, உங்களுக்கு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு வந்த சனி உங்களுக்கு லாபத்தையும் கொடுத்து அதே நேரம் விரயத்தையும் கொடுப்பார் . சொத்து பிரச்னைகள் முடிவ்வுக்கு வரும். அலைசல்கள் குறையும் ,திருமண தடை நீங்கும் , கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும் ,கடன் பிரச்னைகள் நீங்கும் .மருத்துவ சிலவ்வுகள் குறையும்,ஆரோக்கியம் உண்டாகும் புத்திர தடை அகலும் ,அடுத்து அடுத்து வந்த தோல்விகள் நீங்கி வெற்றி கிட்டும் , குடும்பத்தில் தடை  பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும்.கஷ்டங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும் 
    
, பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
    .     உங்கள் ராசிக்கு 10 இல் வருவதால் தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும் , தொழில் வலிமை அடையும் ,தொழிலில் நிம்மதி கிடைக்கும் தொழில் நிரந்தரம் உண்டாகும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்
       வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும் அலைசல்களும் அதிகரிக்கும் மனதில் கற்பனை வளம் கூடும்தொழில் எதிரிகள் அஞ்சுவார்கள் ,வில்லங்கம் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

  மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
        உங்களுக்கு சனி 11 ஆம் இதுக்கு லாப ஸ்தானத்தில் வருவதால் மருத்துவ சிலவுகள் நீங்கும் வருமானம் பெருகும் ,செல்வாக்கு உயரும் ,வீடு கட்டும் யோகம் , வண்டி வாகன யோகம் கிட்டும் . உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கொடுக்கும் செல்வாக்கு புகழ் உண்டாகும் ,நீண்ட நாள் தடை பட்ட விசியங்கள் கைகூடும் ,திருமண யோகம் உண்டாகும். மூத்த சகோதர்களால் ஆதாயம் கிடைக்கும்

பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

  தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
       உங்கள் ராசிக்கு இந்த  சனி பெயர்ச்சி 7 ½ சனி ஆரம்பிக்கிறது .வீண் அலைசல்கள் விரயங்கள் கொடுக்கும், அதிக பயணங்கள் இட மாற்றங்கள் கொடுக்கும், மத்தவங்களுக்கு ஜாமீன் போட்டால் பிரச்னைகள் கொடுக்கும் நீங்க கட்ட வேண்டி வரும் , உங்கள் சொல்லலை வாங்கி உங்களை சிக்க வைத்து விடுவார்கள் கவனம் தேவை
      காரிய தடைகள் திருமண தடைகள் கொடுக்கும் .குரு பெயர்ச்சிக்கு பின் பிரச்னைகள் ஓர் அளவு விலகும் வாகனத்தில் செல்லும் போது சிறு சிறு விபத்தை கொடுக்கும் கவனம் தேவை.
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 
    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு     

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது  

விருசிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 விருசிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
        உங்கள் ராசிக்கு சனி இதுவரை விரைய ஸ்தானத்தில் அமர்ந்து இருந்து வீண் அலைசல் கெட்ட பெயர் அவமானம் ஏமாற்றம் கொடுத்து வந்த சனி இப்போது ஜென்ம ராசில் சஞ்சரிக்கிறார்
        வரவு சிலவு விசியத்தில் , வண்டி வாகனத்தில் நிதானம் தேவை , வீளை மாற்றம் வீடு மாற்றம் உண்டாகும் .உடல்  உபாதைகள் கொடுக்கும் ,மருத்துவ சிலவு மன உளைசல்கள் கொடுக்கும் ,உடல் நிலையில் அதிக அக்கறை தேவை குடும்பத்தில் நண்பர்களிடம் வீண் வம்பு வழக்கு உருவாகும்.நிதானம் தேவை
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும்  
    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது

துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
      உங்கள் ராசிக்கு இதுவரை ஜென்ம சனியாகி ராசியில் உட்சம் பெற்று தொல்லைகள் சிரமங்கள் கொடுத்துவந்த ஜென்ன்ம சனி விலகி பாத சனியாக மாறுகிறார் ஜென்ம சனியால் அதிக சோதனைகள் கொடுத்துவந்த சனி விலகுவது கொஞ்சம் ஆறுதலான விஷயம் ,குரு 10 இல் எருபதால் சனி விலகியும் குரு பெயர்ச்சி வரை சிறப்பு இல்லாத நிலையே நீடிக்கும் தொழில் முடக்கம் இருந்து கொண்டே இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் தொழிலில் சற்று ஆறுதல் கொடுக்கும்
    ஆனால் குடும்ப உறவில் கசப்புகள் வம்பு வழக்குகள் கொடுக்கும் ,குரு பெயர்ச்சி வரை ஜாமீன் விசியத்தில் கவனம் தேவை ,குரு பெயர்ச்சிக்கு பின் வண்டி வாகன யோகம் திருமண யோகம் , வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்றவை சிறப்பாக அமையும் .ஜென்ம சனியை காட்டிலும் இப்போது பாதகங்கள் குறையும்
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது

கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

  கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
  இது வரை 7 ½ வருடம் பாடாத பாடு படுத்தி வந்த சனி முடிவ்வுக்கு வந்துவிட்டது .கடந்த 2 ½ வருடமாக வாக்கு ஸ்தானத்தில் உட்சம் பெற்ற சனி  நீங்கி நல்ல காலம் பிறக்க போகிறது. வீடு, வாகன வசதி சொத்து சேர்க்கை கொடுக்கும் . மூணாம் இடத்தில சனி இருப்பதால் தைரியம் துணிவுடன் எடுத்த காரியம் எல்லாம் முடிபீர்கள் .
      திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் உண்டாகும் ,கடன் தொல்லை நீங்கும் இழந்த பதவி வந்து சேரும் , எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள் தொழில் விருத்தி புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பகையாக இருந்த உறவுகள் வந்து சேர்வார்கள்,வழக்குகளில் வெற்றி கிட்டும் . இந்த சனி பெயர்ச்சி நல்ல முன்னேற்றம் கொடுக்கும் .            
  
       பரிகாரம் :
       சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது       சிறப்பு

சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

  சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
            உங்கள் ராசிக்கு இது வரை 3 ஆம் இடத்தில்  தைரியம் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனி தைரியம் துணிச்சல் வீரியத்தை கொடுத்து வந்த சனி 4 ஆம் இடத்துக்கு அர்த்த அஷ்டம சனியாக பெயர்வதால் இனி பிரச்னைகள் கொடுக்கும் .
     உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் , மனஉளைசல் கொடுக்கும் ,வருமான தடை, வண்டி வாகனத்தில் விரயம் ,சிறு விபத்துகள், தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ,அரசாங்க வழியில் பிரச்னை , மற்றும் குடும்பத்தில் நண்பர்களிடம் வீண் வம்பு வழக்கு உருவாகும் ,பொருளாதார பற்றாகுறை திருமண தடை ,மனதில் பயம் ,எதிரிகலால் தொல்லை ஆகியவை உண்டாகும்