Tuesday, 25 February 2014

பெரியார் பேந்த பேந்த முழித்த கேள்வி


பெரியார் பேந்த பேந்த முழித்த கேள்வி

பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

(
பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.

நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

(
பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.

என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்

Saturday, 22 February 2014

பாவத்திற்கு உண்டான தண்டனைகள்


கருட புராணம் , மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கு உண்டான தண்டனைகள்




ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். 

உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1.
பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2.
கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3.
சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4.
குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5.
தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6.
பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7.
தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8.
கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9.
துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10.
நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11.
பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12.
கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13.
தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14.
அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15.
ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16.
பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17.
டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18.
இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19.
தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20.
பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21.
மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22.
தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.
23.
நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.
24.
தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25.
தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26.
உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27.
விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28.
செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1.
பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2.
குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3.
விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4.
அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5.
தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6.
தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7.
நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8.
தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும். 
நன்றி ;தினமலர்

இந்த பதிவு பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்    
என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர் 




Friday, 21 February 2014

பொன்னான பொன்மொழிகள்

சில பொன்மொழிகள்



1. நீ செய்யும் காரியம் தவறாகும் போது,
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----
2. எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
---திரு. டெஸ்கார்டஸ்—
3. இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது.
எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்.
--பெயர் தெரியா பெரியவர்
4. தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
--புத்தர்---
5. அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்.
--பெயர் தெரியா பெரியவர்---
6. இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
---மாவீரன் நெப்போலியன்---
7. தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.
வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்.
--பெயர் தெரியா பெரியவர்---
8. நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த
வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்---
9. எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே
எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..
--பெயர் தெரியா பெரியவர்---
10. தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம்
தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு
கொண்டு வந்துவிடும்.
--பெயர் தெரியா பெரியவர்---
11. போலியான நண்பனாக இருப்பதைவிட
வெளிப்படையான எதிரியாக இரு
--பெயர் தெரியா பெரியவர்---
12. ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ?
--ரஸ்கின்---
13. எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை
ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.
--பெயர் தெரியா பெரியவர்---
14. ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
---திரு. எட்மன்ட் பார்க்---
15. முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.
புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்
--திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா---
16. காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம்.
ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும்
செய்தால்தான் வெற்றி பெற முடியும்.
--பெயர் தெரியா பெரியவர்
17. நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,
நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும்.
--பெயர் தெரியா பெரியவர்---
18. ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர்.
யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை.
முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள்.
பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
--சுவாமி விவேகாந்தர்—
19. எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு,
உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர்.
--பெயர் தெரியா பெரியவர்
20. நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
--- அண்ணல் காந்தி ---
21. நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது.
மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
---தத்துவஞானி சாக்ரடீஸ்—
22. இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
--தத்துவஞானி கன்பூசியஸ்---
23. அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான்.
அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான்.
--பெயர் தெரியா பெரியவர்---
24. உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும்,
ஒருவருக்கு உணவளி அது போதும்
25. உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
--அன்னை திரசா—
26. ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
--திரு. வோயாஸ்---
27. நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
--கவிஞர் ஹோமர்--
28. சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
--கவிஞர் கண்ணதாசன்--
29. வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை.
தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு..
--கவிஞர் சுகி---
30. உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.
உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.
--பெயர் தெரியா பெரியவர்---
31. உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா?
அப்படியென்றால் சந்தோசப்படு
நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.
--பெயர் தெரியா பெரியவர்---
32. வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
---திரு. ஹென்றி டேவிட் தேரோ----
33. அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
-- தத்துவஞானி கன்பூசியஸ்---
34. உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா?
அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
--திரு. டாக்டஸ்—
35. ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான்.
சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான்.
--பெயர் தெரியா பெரியவர்---
36. இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.
---பைபிள்---
37. வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அது நாளுக்கு நாள் தேய்ந்துவிடும்.
--பெயர் தெரியா பெரியவர்---
38. அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி.
--பெயர் தெரியா பெரியவர்---
39. எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல
--பெயர் தெரியா பெரியவர்-



என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்

-

Wednesday, 19 February 2014

நம் தலை விதி பற்றி தெரிந்து கொள்வோம்


நம் தலை விதி பற்றி தெரிந்து கொள்வோம்

நமக்கு எதாவது கஷ்டம் வந்தால் அது என் தலை விதி அல்லது என் தலை எழுத்து என்று சொல்லுவோம் .தலையை மொட்டை அடித்து பார்த்தால் ஏதாவது எழுதி இருகிறதா என்று பார்த்தல் ஒன்னும் இருக்காது பின் என் எல்லோரும் தலை விதி, தலை எழுத்து என்று சொல்லுகிறோம்
தலை விதி என்றால் என்ன என்று பாப்போம். .தலை விதி என்பது, தலையில் எழுதும் விதி அல்ல, தலை என்றால் முதல், என்று அர்த்தம் .அதாவது முதல் விதி என்று அர்த்தம் நாம் ஜெனனம் ஆவதற்கு முன்னமே நமக்கு விதிக்கப்பட்ட முதல் விதி என்று அர்த்தம் .அது என்ன முதல் விதி அது எப்போது எழுதபட்டது என்று பார்போம்

ஒரு ஜெனனம் நிகழ ஒரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் அந்த இணைவு நடக்கும் போது அதாவது கரு ஊட்டல் நடக்கும் போது இருக்கும் தாயின் நிலை , தந்தையின் நிலை, தாயின் உடல்நிலை ,தந்தையின் உடல்நிலை ,கோள்களின் நிலை இவை அனைத்தும் சேர்ந்து அங்கே நமக்கு நம்முடைய தலை விதியை அல்லது முதல் விதியை அங்கே உருவாக்கும் அதன் படியே நாம் ஜெனனம் நடக்கும். நம்முடைய ஜெனனம்அப்போதே .தீர்மானித்து விடும், நம்முடைய ஜெனனமே முதல் விதி,படியே சுகபிரசவமமா  அல்லது ஆப்ரேசனா என்பதை அப்போதே முடிவாகிவிடும் .அதனால் தான் நாம் முன்னோர்கள் தாலிகட்டும் நேரம் போலவே ஆணும் பெண்ணும் இணையும் சாந்தி முகூர்த்ததிற்கு அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றுஉள்ளனர்

என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்

Sunday, 16 February 2014

ராகு கேது இருக்கும் வீடுகளின் பொது பலன்கள்


               ராகு

                      1-ம் வீடு அல்லது லக்கினத்திலிருந்தால் : தழும்போ அல்லது மச்சமோதலையில் காணப் படும்.
                          நல்ல குணங்கள் குறைந்து காணப் படும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.


                       2-ம் வீடு பணத்தட்டுப் பாடு இருக்கும். சிலருக்கு மனைவி இரண்டு. ஏதாவது பிரச்சனைகள்
                            இருந்து கொண்டே இருக்கும்
.

                       3-ம் வீடு தைரியசாலியாக இருப்பார். இளைய சகோதரத்துடன் ஏதாவது பிரச்சனை இருக்கும்
.

                       4-ம் வீடு தாயாருக்கு உகந்தது அல்ல: வீட்டு விவகாரங்களில் அதிக அக்கரை காட்ட மாட்டார்
.

                       5-ம் வீடு இதை சர்ப்ப தோஷம் என்பார்கள். குழந்தைப் பேருக்கு இடைஞ்சல் உண்டாகும்.
                          பூர்வ புண்ணிய மற்றவர்
.

                      6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றி கொள்வர். தாய் மாமனுக்கு ஆகாது
.

                      7-ம் வீட்டில் இருந்தால் சிலருக்கு மனைவியர் இரண்டு. மனைவி வியாதி
                          உள்ளவளாக  இருப்பாள்
.

                     8-ம் வீட்டில் இருந்தால் எப்போதும் கவலையுடன் இருப்பார். கஷ்டங்கள் இருந்து வரும்
.

                     9-ம் வீடு தகப்பனாருக்கு ஆகாது. செய்யும் தருமங்களுக்குப் பெயர் இருக்காது.
                         உயர் படிப்பில் தடை வரும்
.

                    10-ம் வீட்டில் இருந்தால் தொழிலில் பல தொந்தரவு இருந்து வரும்
.

                    11-ம் வீட்டில் இருந்தால் எத்தகைய குறையும் இல்லை. நல்லதே நடந்து வரும்
ம்.

                    12-ம் வீட்டில் இருந்தால் செலவுகள் இருந்து வரும். சிலருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.


                             கேது

                      1-ம் வீடு முகத்தில் மச்சம் அல்லது வடு உண்டாகும்.
                          நல்ல கிரகங்களின் சேர்க்கை  இருந்தால் நன்மை உண்டாகும்
.

                      2-ம் வீடு அவர் நாக்கே அவருக்கு எதிரி. எப்போதும் கவலைகள் இருக்கும்.
                           சிலருக்கு இரண்டு   மனைவிகள்
.

                       3-ம் வீடு தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்க மாட்டார்.
                            நவீன நாரதர் என்றும் கூறலாம். இளைய சகோதரத்துடன் பிணக்கு
.

                        4-ம் வீடு நல்ல கிரகங்கங்கள் சேர்க்கை இருந்தால் 4-ம் வீடு குறிக்கின்ற
                            ஆதிபத்தியங்கள் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நன்மை இல்லை
.

                        5-ம் வீடு இஷ்ட தெய்வம் வினாயகர். புத்திர தோஷம் உண்டு. நல்லவர்
                           சேர்க்கையோ பார்வையோ இருந்தால் நல்லது செய்வர்.


                        6-ம் வீடு:-எதிரிகளை வெற்றி கொள்வர். போட்டிகளில் வெற்றி பெறுவர்.
                            எல்லோர் நடுவிலும் பெயர் பெற்று இருப்பர்
.

                       7-ம் வீடு சிலருக்கு 2 மனைவிகள் உண்டு. நல்ல கிரக சேர்க்கை இருப்பின்
                           ஒரு மனைவிதான் உண்டு. சோம்பேரித்தனமாய் இருப்பர். கெட்ட கிரக சேர்க்கை
                           இருப்பின்    மனைவியால் துன்பம்
.

                          8-ம் வீடு துன்பங்கள் தொடரும். வியாதிகள் வரக்கூடும். சிலருக்குப் பெண்கள்
                                       சம்மந்தமான  நோய் வரக்கூடும்
.

                         9-ம் வீடு தகப்பனாருடன் நல்ல உறவு இருக்காது. தற்புகழ்ச்சி உள்ளவர்.
                            தெய்வ நம்பிக்கை குறைந்தவர். சுறுசுறுப்புக் குறைந்தவர்
.

                       10-ம் வீடு நண்பர்கள், சொந்தக்காரர்கள் நடுவில் பெயருடனும் புகழுடனும் இருப்பர்.
                              நம்பிக்கைக்குறிய வேலைக்காரர்கள் இருப்பார்.

                      11-ம் வீடு பணப்புழக்கம் உள்ளவர். பணச்சேமிப்பு இருக்கும். சாகசக் காரியங்களில் ஈடுபடுவர்
.

                       12-ம் வீடு பாப காரியங்களில் ஈடுபடுபவர். பிதுரார்ஜித சொத்துக்கள் போய்விடும்.
                             கண்பார்வையில் கோளாறு இருக்கும். பெயர் புகழை இழப்பர்
.இந    
என்று       என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்