Sunday, 16 March 2014

18 ம் படி ரகசியம்


18 ம் படி ரகசியம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டு படிகள் இருப்பதுக்கு என்ன காரணம் என்று பாப்போம்.
நாம் சபரிமலைக்கு மாலை இட்டால் சில சம்பிரதாயங்களை கடைபிடிப்போம் .அந்த சம்பிரதாயங்களை கடை பிடித்தால் தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்று எலோருக்கும் தெரியும் .அந்த சம்பிரதாயங்களை ஒற்றியே இந்த பதினெட்டாம் படி ரகசியம் ஒளிந்து உள்ளது.
சம்பிரதாயங்களில் ஒன்று பஞ்சேந்திரியங்களை அடக்குவது .அதாவது கண், காது, மூக்கு ,வாய், தோல், இதை அடக்குவது . காதுக்கு கெட்டதை கேக்காதே, கண்ணுக்கு கெட்ட விசயங்களை பாக்காதே,வாய்க்கு புலால் உண்ணாதே ,தோலுக்கு இரண்டு வேளையும் குளித்து சுத்தபடுத்து ,இப்படி பஞ்சேந்திரியங்களையும் அடக்கி , அறுங்குணங்ககளையும் சீரமைத்து   அறுங்குணம் என்றால் ஆறு குணம் .நம்மிடம் உள்ள கெட்ட ஆறு குணங்களான பேராசை ,கடும்பற்று ,சினம் ,முறைஅற்ற பால் கவர்ச்சி(SEX), உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் இந்த ஆறு குணங்களையும் சீரமைத்தல் நாம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களின் வழியாக ஏழு சக்கரம் என்றால் மூலாதாரம், சுவாதிஸ்தானம்,மணிபூரகம், அனகாதம்,விசுத்தி, ஆக்கினை, துரியம் என்னும் ஏழு சக்கரங்களை கடந்து குண்டலினி சக்தி மேலோங்கி  நிற்கும் அப்பொழுது  ஐந்து பூதங்களின் அப்பனான அய்யப்பனை கண்டு தரிசிக்கலாம் என்பதே ஐதீகம், பஞ்சேந்திரியங்களை அடக்கி ,அறுங்குணங்களை சீரமைத்து , ஏழு சக்கரங்களை கடந்து இந்த பதினெட்டு விதிகளை கடைபிடித்தால் ஐந்து பூதங்களின் அப்பனான ஐயப்பனை காணலாம் என்பதே ஐதீகம்.
என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்

Saturday, 15 March 2014

ருத்ராசம் அணியும் காலம்



ருத்ராசம் அணியும் காலம்

ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது.     இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும்.

வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.

நட்சத்திரம் - கிரகம் - அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1)
அஸ்வினி - கேது - நவமுகம்

2)
பரணி - சுக்ரன் - ஷண்முகம்

3)
கார்த்திகை - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

4)
ரோஹிணி - சந்திரன் - த்விமுகம்

5)
மிருகசீரிஷம் - செவ்வாய் - த்ரிமுகம்

6)
திருவாதிரை - ராகு - அஷ்டமுகம்

7)
புனர்பூசம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

8)
பூசம் - சனி - சப்தமுகம்

9)
ஆயில்யம் - புதன் - சதுர்முகம்

10)
மகம் - கேது - நவமுகம்

11)
பூரம் - சுக்ரன் - ஷண்முகம்

12)
உத்தரம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

13)
ஹஸ்தம் - சந்திரன் - த்விமுகம்

14)
சித்திரை - செவ்வாய் - த்ரிமுகம்

15)
ஸ்வாதி - ராகு - அஷ்டமுகம்

16)
விசாகம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

17)
அனுஷம் - சனி - சப்தமுகம்

18)
கேட்டை - புதன் - சதுர்முகம்

19)
மூலம் - கேது - நவமுகம்

20)
பூராடம் - சுக்ரன் - ஷண்முகம்

21)
உத்திராடம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

22)
திருவோணம் - சந்திரன் - த்விமுகம்

23)
அவிட்டம் - செவ்வாய் - த்ரிமுகம்

24)
சதயம் - ராகு - அஷ்டமுகம்

25)
பூரட்டாதி - சனி - பஞ்சமுகம்

26)
உத்திரட்டாதி - சனி - சப்தமுகம்

27)
ரேவதி - புதன் - சதுர்முகம்

Friday, 7 March 2014

மனதுக்கும் புத்திக்கும் என்ன வித்தியாசம் ?




மனதிற்கும் புத்திக்கும் என்ன வித்தியாசம் ?

பலருக்கு மனது என்றால் என்ன [புத்தி என்றால் என்ன என்பது தெரியவில்லை .மனது என்பது எப்பொழுதும் உணர்சிகள் சம்பந்தப்பட்டது அது ஒவ்வொரு விசயத்திலும் பிடிக்கும் பிடிக்காது என்பதை நமக்கு உணர்த்தும் . புத்தி என்பது நல்லது கெட்டது எது என்பதை நமக்கு உணர்த்தும்.
         உதாரணமாக ,ஒரு கார் வாங்குவதற்காக நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது ,அங்கே 50 விதமான கார்களை வரிசையாக நிறுத்தி இருக்கிறார்கள் . நீங்கள் தூரமாக இருந்து 50காரையும் உங்கள் கண்களால் பார்த்து கொண்டு இருக்கும் போது , உங்கள் மனம் அந்த 50காரில் ஒன்று அல்லது இரண்டு கார்களில் மட்டுமே கவனம் செலுத்தும் . நமது மனம் அந்த 50 காரில் எந்த கார் பிடித்து இருகிறது எந்த கார் பிடிக்கவில்லை என்பதை என உடனடியாக நமக்கு தெரியபடுத்தும் இந்த மனதுக்கு அந்த காரில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் நம்மால் வாங்க முடியுமா இதன் விலை என்ன பெட்ரோல் மூலமாக ஓடுகிறதா டீசல் மூலமாக ஓடுகிறதா என்பதை எல்லாம் பற்றி கவலைபடாது மனது எனக்கு பிடித்து இருக்கிறது பிடிக்க வில்லை என்பது மட்டுமே நமக்கு தெளிவாக உணர்த்தும்ஆனால் புத்தி என்பது அந்த கார் அலுவலகத்துக்கு சென்று ஒவ்வொரு காரை பற்றிய விசயங்களை பற்றி தெரிந்து கொண்டு எந்தந்த காரின் விலை என்ன எதற்கு லோன் கிடைக்கும் எதற்கு கிடைக்காது அது நாம் வீட்டில் உள்ள அணைத்து நபர்களுக்கும் பொருந்துமா அலுவலகத்துக்கு பொருந்துமா நமது வீட்டில் நிறுத்த முடிமாபோன்ற பல சந்தேகங்களை போன் கேட்டு கொண்டுஇரண்டு மூன்று நாள் அல்லது ஒரு வாரம் கழித்து நமது புத்திஒரு முடிவுக்குவரும்அந்த அம்பது காரில் இந்த கார் தான் இருபதிலேயே நல்லது இதை நாம் வாங்கலாம்என்று கூரும் இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் மனதிற்கு பிடித்த காருக்கும் புத்தி நல்லது என்ற காருக்கும்சம்பந்தமே இருக்காது இதே போல் ஒவ்வொரு விசியதிலும்நாம் மனது ஒரு முடிவையும்புத்தி ஒரு முடிவையும் எடுக்கிறது.
          உலகில் உள்ள அணைத்து மனிதருக்கும் உள்ள குழப்பத்திற்கு காரணம் மனதிற்கு பிடித்தது செய்வதா அல்லது நல்லதை செய்வதாஇத குழப்பம் தான் மனிதனனின் அமைதிக்கு பெரிய எதிரி .இதை புரிந்து கொண்டால் நாம் மனதில் அமைதி என்றும் இருக்கும்.புத்தியும் மனதும் தனி தனியாக வேலை செய்யும் போது குழப்பம் ஏற்படுகிறது.
  மனதுக்கு  பிடிக்கும் பிடிக்காது என்று மட்டுமே சொல்லதெறியும் .ஆனால் புத்திக்கு மட்டுமே நல்லது கெட்டது தெரியும் .ஒரு பொருளை வாங்கும் போதோ அல்லது ஒரு செயலை செயும் போதோ நாம் மனதுக்கும் புத்திக்கும் இரண்டுக்கும் பிடிக்கும் ஒரு காரியம் செய்யும் போது அது எப்போதும் நமக்கு பிரச்னை தராது . புத்திக்கு மட்டும் பிடித்து ஒரு காரியம் செய்தாலும் அல்லது மனதுக்கு மட்டும் பிடித்து ஒரு காரியம் செய்தாலும் அந்த செயல் என்றாவது ஒரு நாள் பிரச்னை கொடுக்கும் எந்த ஒரு செயலையும் செய்தாலும் மனதுக்கும் புத்திக்கும் பிடித்த ஒரு செயலை செய்தால் தான் அந்த செயல் தான் வெற்றி பெறும் .
நன்றி ; healer பாஸ்கர் 

என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்


Thursday, 6 March 2014

இராமர் பட்டாபிஷேகம் காட்சி உணர்த்துவது


இராமர் பட்டாபிஷேகம் காட்சி உணர்த்துவது என்ன

இந்திய கடவுள்களில் அதிகம் பேசப்படும் கடவுளான ராமருக்கு தனியாக எங்காவது கோவில் உள்ளதா ராமர் லட்சுமணன் சீதை உடன் தான் கோவில் உள்ளது .
      ராமாயண காவியத்தில் ராவணனை வென்றது இராமரின் வீரம் மட்டும் அல்ல ,,இராமன் லட்சுமணன் சீதை அனுமான் இவர்களின் ஒத்துழைப்பால் தான் ராமாயணம் வென்றது ,.இராமன் வனவாசம் செல்லும்போது லக்ஷ்மணன் அரச சுகத்துக்கும் பதவி சுகத்துக்கும் ஆசை பட்டு இராமனுடன் செல்லாமல் இருந்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது. சீதை அசோகா வனத்தில் இருக்கும் போது இராமன் இத்தனை நாள் வராதவர் இனிமேல் தான் வர போகிறாரா என நினைத்து ராவணனின் அரண்மனையில் தஞ்சம் அடைந்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது . அனுமான் அவர்கள்,சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தும் ,லட்சுமணன் உயிரை சஞ்ஜுவி முலிகையால் மீட்காமல் இருந்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது . பரதன் பதவி சுகத்துக்கு ஆசைபடாமல் அண்ணன் வரும் வரை அவர் பாதணிகளை வைத்து ஆட்சி செய்து இராமர் வந்தஉடன் பட்டாபிசேகம் செய்து வைக்காமல் ஆட்சியை தன வசம் வைத்து இருந்தால் ராமாயணம் உருவாகி இருக்காது . அதனால் தான் ராமர் பட்டாபிசேகம் காட்சி புகழ் பெற்றது . அதனால் தான் ராமருக்கு தனியாக எங்கும் கோவில் இல்லை 

 என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்