Tuesday, 30 December 2014

மனதைத் தொட்ட வரிகள்....!!

மனதைத் தொட்ட வரிகள்....!!
1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? 
உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.
5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது
7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!
8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
10. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
11. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
12. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
13. வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
14. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
15. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
16. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
17. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
18. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
19. பறக்க விரும்புபவனால் படர முடியாது.
20. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை
அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
21. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!
நமது வீட்டின் வாயிலை அழகுபடுத்துவதில் கோலம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோன்று நமது உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்துவதுதான் அதிகாலை நீராடுதல்
தூங்கும்போது இந்திரியங்களில் ஏற்படும் அசுத்தி மற்றும் உடல் அசதி நீங்கி புத்துணர்வு பெற அதிகாலையில் நீராடுதல் நல்லது.
நீராடலில் மூன்று வகை உள்ளது. அவை
1 ரிஷி ஸ்நானம் [காலை 4 முதல் 5 வரை] உத்தமம்,
2 மனித ஸ்நானம் [காலை 5 முதல் 6.30 வரை] மத்திமம்.
3 ராட்சக்ஷ ஸ்நானம் [காலை 6.30க்கு மேல்] அதமம். சூரிய உதயத்துக்கு முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும். அந்த நேரத்தில் நீராடுவது பிராத ஸ்நானம் எனப்படும்.
அதிகாலையில் நீராடுபவர்களுக்கு சரீர அழகு பலம் சுத்தம் ஆயுள் ஆரோக்கியம் தைரியம் கிடைக்கும். சாஸ்திர விதிப்படி மூன்று வருட காலம் அதிகாலை நீராடுபவருக்கு ஏழு பிறவிகளில் செய்த பாபங்களும் நீங்கும் என்கிறது பராசரஸ்மிருதி.
நீராடுவது என்றால் உடனே தண்ணீரில் குதிப்பது என்று பொருளல்ல. எங்கே எப்படி குளிக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன. ஆற்றில் நீராடும்போது நீரோட்ட திசையில் நின்று நீராட வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளித்தால் முதலில் தலையில் நீரை ஊற்றவேண்டும். வென்னீர் ஊற்றி தலை குளிக்கும்போது உள்ளங்காலில் ஆரம்பித்து பின் படிப்படியாக உச்சந்தலையில் ஊற்றவேண்டும் என்பது பெரியோர் அறிவுரை எனவே நீராடும்போது இறைப்பாடல்களைப் பாடிக்கொண்டோ அல்லது இறைகோஷங்களை ஓதிக்கொண்டோ குளிப்பது நலம்.
அறிவியல் விளக்கங்கள்:—–
அதிகாலை சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி எலும்புகளின் பலத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பார்த்து நின்று குளிக்கவேண்டும் நம் உடலில் வெப்ப நிலையைவிட வென்னீரின் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் வென்னீரை முதலில் தலையில் ஊற்றும்போது நரம்புத்தளர்ச்சி ஏற்படும் எனவேதான் பாதத்தில் இருந்து படிப்படியாக ஊற்றினால் உடலின் வெப்ப நிலை பாதிப்படையாது. இறைவன் பெயரை சொல்லிக்கொண்டே குளிப்பதால் சைனஸ் பிரச்னை வராது நம் முகத்தில் குறிப்பாக தாடையில் உள்ள வேகஸ் நரம்புகள் கோஷம் கூறும்போது இயங்குவதால் நீர்கோர்வை தடுக்கப்படுகிறது, விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மந்திர ஒலிகளின் அதிர்வுகள் நம் உடலில் நுழையத் தடை ஏற்படுகிறது. அதனால்தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பதை மரபாக வைத்துள்ளனர் நம் பெரியோர்.
தவிர விரத நாட்களில் பகலில் தூங்கக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்தால் பகலில் தூக்கம் வரும். எனவே வெறும் தலைக்கு குளிக்கலாம் என்றும் கூறினர்.

Tuesday, 23 December 2014

பொன்மொழிகள்...!!

பொன்மொழிகள்...!!
1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
6. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம் தான் வேண்டும்.
7. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
8. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
9. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
10. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.
11.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது..

Monday, 8 December 2014

பொன்மொழிகள்..

பொன்மொழிகள்...
1. பேசா விரதமே பெருவிரதம். - பழமொழி
2. யாகாவாராயினும் நாகாக்க. - திருக்குறள்
3. உடலும் உள்ளமும் கெடுவதற்குக் காரணம் வாய்தான் - போர்னியா
4. சில சமயங்களில் வாய்திறந்து பேசுவதைவிட பேசாமல் இருப்பதே மிகுந்த பலனைத் தரும்.- மகாத்மா காந்தி
5. கால் வழுக்கினால் உடல் ஊனமடையும். நாக்கு வழுக்கினால் வாழ்க்கையே பாழாகிவிடும்.
- ஹென்றிபோர்ட்
6. நீ பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான். - பைபிள்
7. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை, அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
- நபிகள் நாயகம்
8. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக் கொள்வான். - தாமஸ் புல்லர்
9. அறிவாளி யோசித்துவிட்டுப் பேசுகிறான்; முட்டாள் பேசிவிட்டு யோசிக்கிறான். - டனலல்
10. எல்லோருக்கும் காது கொடுங்கள்; எவரிடமும் வாய் கொடுக்காதீர்கள். - ஷேக்ஸ்பியர்